தென்னிலங்கையில் ஹோட்டலுக்கு சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல்
களுத்துறையில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இளைஞர்கள் குழு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம பகுதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்கள் மீது தாக்குதல்
இளைஞர் குழுவொன்று பொல்கொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் முன்பதிவு செய்து சுற்றுலாவுக்காக அங்கு சென்றுள்ளது.

இதன்போது, ஹோட்டல் உரிமையாளரின் உறவினர்கள் சிலர் நீச்சல் தடாகத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் தங்களுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
வாக்குவாதம்
பின்னர் இந்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த நண்பர்கள் குழுவிடம் ஹோட்டலை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினர்களுக்கு இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளரும் பணியாளர்கள் சிலரும் இணைந்து நண்பர்கள் குழுவைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
2600 கோடி வசூல்! வரலாற்று சாதனை ஒரு பக்கம்.. மாபெரும் பின்னடைவு மறுபக்கம்.. 2025ல் தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri