ஆளும் கட்சி உறுப்பினருக்கு அரசு வழங்கிய பரிசு
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டி ஆராச்சிக்கு (Tissa Kutti Arachchi) புதிய பிராடோ ரக வாகனம் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஆளும் கட்சியின் சார்பில் கடந்த காலத்தில் தீவிரமாக குரல் கொடுத்து வந்த காரணத்தினால், திஸ்ஸ குட்டி ஆராச்சிக்கு இந்த பிராடோ வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஒரு நாள் இந்த வாகனத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பயணித்த போது, இந்த வாகனம் குறித்து விசாரித்துள்ளனர்.
சிறப்பான முறையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததாகவும் இதன் காரணமாக பிராடோ வாகனம் கிடைத்தது எனவும் குட்டி ஆராச்சி, சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kavirathna) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சம்பந்தமாக திஸ்ஸ குட்டி ஆராச்சி ஆபாசனமாக பதில் உரையாற்றியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் சபாநாயகரும் திஸ்ஸ குட்டி ஆராச்சியை கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan