அரசாங்கத்தின் நெல் கொள்வனவு தொடர்பில் மொட்டு கட்சி கேள்வி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நெல் கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஒரு நாள் நுகர்விற்கு போதுமான அளவு அரிசியைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி கட்டுப்பாட்டு
அரசாங்கம் எவ்வளவு மெற்றிக் தொன் எடையுடைய நெல்லை கொள்வனவு செய்துள்ளது என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நெல் கொள்வனவிற்காக ஐந்து பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இது நான்கு நாட்கள் அரிசி நுகர்விற்கு மட்டுமே போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் எடையுடை கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையிலும் 40 ரூபா மேலதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025