அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு கடமைக்கு வரத் தவறும் அதிகாரிகளிடம் இருந்து 1 இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகளின் கடமை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும்.
சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும்.
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை, மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல.

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம்.
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        