அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு: 65 இலட்சம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அரசாங்கம் 13இலட்சம் அரச ஊழியர்ளுக்கு ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா அதிகரிப்பதாக தெரிவித்துள்ளபோது 65இலட்சம் ஊழியர்கள் இருக்கும் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் வரவு செலவு திட்டத்துக்கு பின்னராவது அரசாங்கம் வரவு செலவு திட்ட நிவாரண சட்டத்தை கொண்டுவந்து தனியார் துறைக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
தனியார் ஊழியர்கள் பாதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அரச ஊழியர்களுடன் தனியார் ஊழியர்களும் பாதிக்கப்படுக்கின்றனர். கடந்த ஒரு வருடத்துக்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதன் பின்னர் மின் கண்டனம் நூற்றுக்கு 440வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறை தொர்பாக எந்த ஏற்பாடுகளும் இல்லை.
அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 4 வருடங்களுக்கு 1000ரூபா பெற்றுக்கொடுத்தோம். அதுவும் சில தோட்டங்களில் நீண்ட காலத்துக்கு பின்னரே வழங்கப்பட்டது. அதுவும் சில தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் இன்று ஆயிரம் ரூபாவில் நாள் ஒன்றுக்கான செலவை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபாவாவது வழங்க வேண்டும்.
அத்துடன் சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் 50ஆயிரத்துக்கும் அதிக தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இளைஞர் யுவதிகள் அங்கு தொழிலுக்கு வருவதில்லை. வழங்கப்படும் சம்பளத்தில் அவர்களுக்கு வாடகை பணம் கட்டிக்கொண்டு தொழில் செய்ய போதுமானதாக இல்லை. அதேபோன்று கடந்த சில காலத்துக்குள் நாட்டில் 5இலட்சத்து 35ஆயிரம் பேரின் தொழில் இலக்கப்பட்டிருக்கிறது.
வரியை அதிகரித்துள்ள அரசாங்கம்
ஈபிஎப். ஈடிஎப். பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இதனை கணக்கிட்டு பார்க்க முடியும்.
கடந்த 3 வருடத்தில் ஈபிஎப். கணக்கில் மாத்திரம் 29இலட்சம் இருந்தது. அது தற்போது 24இலட்சத்துக்கு குறைவடைந்துள்ளது. அதாவது 5இலட்சத்தால் ஈபிஎப். கணக்கு குறைவடைந்துள்ளது. அதாவது 5இலட்சம் பேர் தொழிலை விட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கம் வரியை நூற்றுக்கு 18ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த வற் வரி அதிகரிப்பில் தனியார் துறையினரும் அடங்குகின்றனர். வற் வரி அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் 859 பில்லியன் ரூபாவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அரசாங்கம் 65இலட்சம் தனியார் துறை ஊழியர்களிடமே இந்த தொகையை பெற்றுக்கொள்ள இருக்கிறது. ஆனால் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை.
அதேநேரம் வரி அதிகரிப்பின் மூலம் எதிர்வரும் ஜனவரி முதல் ஒரு குடும்பத்துக்கு 13ஆயிரத்து 500 ரூபா புதிதாக வரி சுமை ஏற்படுகிறது. இது பாெருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாத்திரமான வரியாகும். ஆனால் அவர்களுக்கு ஒரு சதம் கூட வருமானம் அதிகரிப்பதில்லை. அரசாங்கம் இந்த விடயங்களை மறந்து தனது இறுப்பை தக்கவைத்துக்கொள்ள மாத்திரமே சிந்தித்து வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக தனியார் துறைக்கு மிகவும் சிறியதொரு தொகையே அதிகரிக்கப்படுகிறது. 85வீத மான நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கும் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெறுவதில்லை.
அதனால் அரசாங்கம் 13இலட்சம் அரச ஊழியர்ளுக்கு ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா அதிகரிப்பதாக தெரிவித்துள்ளபோது 65இலட்சம் ஊழியர்கள் இருக்கும் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் வரவு செலவு திட்டத்துக்கு பின்னராவது அரசாங்கம் வரவு செலவு திட்ட நிவாரண சட்டத்தை கொண்டுவந்து தனியார் துறைக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |