ஐஸ் போதைப்பொருளுடன் அரச பணியாளர் ஒருவர் கைது..! விசாரணைகள் தீவிரம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(12.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கிண்ணியாவில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்றி வருகிறார் என்றும், இவர், கிண்ணியா காக்காமுனைப் பகுதியை பிறப்பிடமாகவும், முனைச்சேனை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam