சுதந்திர தினத்தை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த இணையுங்கள்: அருட்தந்தை மா.சக்திவேல்
தமிழர்களை தொடர்ந்து அரசு ஏமாற்றும் நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (01.02.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்த குற்றங்கள்
இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த 76 வருட காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நீதியான கோரிக்கைகளை ஏற்காது தீர்வு என தொடர்ந்து ஏமாற்றுகின்றனர்.
தமிழர்களின் தாயகத்தை பல்வேறு வகைகளில் ஆக்கிரமித்து அவர்களை சொந்த நிலத்திலேயே அந்நியர்கள் ஆக்கும் முயற்சியை தீவிரபடுத்தியும் உள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டாளர்களை எப்போதும் கைது செய்யும் நிலை தொடர்கின்றது. படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நிலமும், மக்களும் வைக்கப்பட்டுள்ளனர். யுத்த குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.
அதற்கான நீதியை சர்வதேசமும் காலம் தாழ்த்தி வருவது என்பது நீதியை கொலைக்கு உட்படுத்தும் செயலாகும்.
அரசியல் கைதிகள்
இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி வடகிழக்கு எங்கும் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி நடத்தப்படவிருக்கும் அறவழிப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தனது பூரண ஆதரவை தெரிவிக்கும்.
அதற்கு சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.
கறுப்பு தினம்
வடக்கில் மனித புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்ட போதும் அவை எழுப்பும் குரலுக்கு ஆட்சியாளர் செவிமடுக்க மறுக்கின்றனர். அவற்றுக்கான நீதியும்மௌனிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே கணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நிலையும் இன்று உள்ளது.
தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டு அரசியல் ரீதியில் அடக்குமுறை விரிவுபடுத்தப்பட்டபோது அதற்கு ஆதரவை தெரிவித்த தெற்கின் சமூகம் தற்போது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்தை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர உள்ள நிலையில் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இதனையே கடந்த 76 ஆண்டு காலமாக தமிழர்கள் உரத்து கூறி வந்திருக்கின்றார்கள்.
அதனை மீண்டும் அழுத்தி கூறுவதற்கு எதிர்வரும் 4 ஆம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி நடத்தப்படவருக்கும் அறவழி போராட்டம் தெற்கின் சமூகத்திற்கு விழிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம். அவர்கள் விழித்துக் கொண்டு தமிழர்களோடு இணைந்தால் மட்டுமே முழு நாட்டுக்கும் எதிர்காலமும் உண்டு. சுபீட்சமும் உண்டு என அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
