மூடப்படும் மதுபானக் கடைகள்: வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரச விடுமுறை குறித்து வெளியான தகவல்
எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
அதற்கு பதிலளித்தவர் 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 16 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
