நாட்டிற்கு சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
நாட்டிற்கு சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்கள்
இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாம் பல தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதன் கீழ், நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணியை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம்.
பல தசாப்தங்களாக இந்த நிறுவனங்களின் இழப்பு அரச வளங்கள் என்ற போர்வையில் பொதுமக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமக்கப்பட்டது.
இந்த நிறுவனங்களின் இழப்பு மக்கள் மீது சுமத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் பல அரச நிறுவனங்களின் மொத்த இழப்பை நான் குறிப்பிடுகிறேன்.
மக்கள் மீது சுமையை சுமத்த முடியாது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 1,057 பில்லியன் ரூபாவும், இலங்கை மின்சார சபைக்கு 261 பில்லியன் ரூபாவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 799 பில்லியன் ரூபாவும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4,000 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இந்த சுமையை இனி மக்கள் மீது சுமத்த முடியாது.
எனவே, நாங்கள் இந்த நிறுவனங்களை மறுசீரமைத்து, அவை நாட்டிற்கு சுமையாக இல்லாத சூழ்நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
