நாடாளுமன்றில் ஜனாதிபதியின் விசேட உரை! விவாதத்தை இன்றே எடுத்துக்கொள்ள இணக்கம் (Live)
ஜனாதிபதி நாடாளுமன்றில் இன்றைய தினம் (06.10.2022) ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தை இன்றே எடுத்துக் கொள்வதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் போது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் விசேட உரையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5 மணி வரை, அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர், பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
இதேவேளை தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.