2016இற்கு பின் அதிகரிக்கப்படாத அரச ஊழியர்களின் சம்பளம்: புதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க முணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (04.10.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கை செலவீனம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது. அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை.
கொடுப்பனவு
எனவே அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri