அரசாங்கத்தின் பொய்களை அதன் தீவிர ஆதரவாளர்களே நம்புவதில்லை! சர்வஜன பலய கட்சி
தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை தீவிர விசுவாசிகளாக இருக்கும் ஒரு சிலர் கூட, நம்பவில்லை என்று சர்வஜன பலய கட்சியின் செய்தித் தொடர்பாளரான மருத்துவர் பிரியங்கர மகாகம்முல்லகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான பொய்களாலும், அந்தப் பொய்கள் நாட்டுக்கு முன்பாக அம்பலமானதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், நாடு 2022-ஆம் ஆண்டு நிலைமைக்குத் திரும்பி விடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூறும் அறிக்கைகள் பொய்யானதாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூபாவின் பெறுமதி
தொடர்ந்து மதிப்பிழந்து வரும் ரூபாயின் பெறுமதி, அரசாங்கத்தின் கெட்டித்தனத்தால் அன்றி மாறாக சமூக ஊடகச் செயல்பாடுகள் மூலம் டொலர்களைச் சம்பாதித்து, நாட்டின் டொலர் கையிருப்பைச் சந்தையில் வெளியிடும் இளைஞர்களிடமிருந்து நாடு இந்த நாட்களில் சுமார் 4-5 மில்லியன் டொலர்களைப் பெறுவதால் தான் இப்போதெல்லாம் வலுப்பெற்று வருகிறது என்று பிரியங்கர மகாகம்முல்லகே குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பகிரங்கமாகக் கூறியது போல, வெளிநாடுகளில் உள்ள கட்சி கிளைகள் மூலம் நாட்டிற்கு டொலர்களை தருவிப்பதை செய்து காட்டுவதற்கான தருணம் இப்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.