லொஹான் ரத்வத்தவை பதவி விலக்குமாறு ஜனாதிபதியிடம் நாமே கூறினோம்! மன்னிப்புக்கோரும் அரசு
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களையடுத்து ஜனாதிபதியைத் தொடர்புகொண்டு, லொஹான் ரத்வத்தவைப் பதவி விலக்குமாறு நாமே கோரினோம்.
இதற்கமையவே அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக் கூடாது. அவற்றை அனுமதிக்கவும் முடியாது.
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது என்றார்.
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri