அரசியல் வரலாற்றில், திருப்பம் மிக்க நாளில் கோட்டாவை சந்திக்க செல்கிறார் மஹிந்த!
அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் பிரதமரிடம் கையளித்தனர்.
இதனையடுத்து அமைச்சர்களின் பதவி விலகல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியலமைப்பின்படி இது தொடர்பிலான முடிவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



