அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ள கோட்டாபய
அரசியல் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பிச் சென்று இரண்டு மாதங்களின் பின்னர் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்த நாடும் அரசியல் புகலிடத்தை வழங்கவில்லை.
இந்த நிலையில் இரத்துச் செய்த தனது அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற கோட்டாபய ராஜபக்ச விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு உலகில் வேறு நாடுகள் அரசியல் புகலிடத்தை வழங்காத நிலையில், அவர் இரத்துச் செய்த தனது அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கோட்டாபய ராஜபக்ச தரப்பில் இந்த செய்தி தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி அயோமா ராஜபக்ச, புதல்வர் மனோஜ் ராஜபக்ச மற்றும் மருமகள் பேரப்பிள்ளையுடன் இலங்கையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
