கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
அங்கு அவருக்கு தாய்லாந்து இரகசியப் பொலிஸார் சிவில் உடையிலும், விசேட பொலிஸார் ஆயுதங்களுடனும் பாதுகாவல் வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்
எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோட்டாபய, ஹோட்டலை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்று தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலையில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவரைக் கொண்டே கோட்டாபய தனக்குத் தேவையானவற்றை வௌியில் இருந்து தருவித்துக் கொள்கின்றார்.
முன்னதாக தாய்லாந்தின் புகெட் நகரில் அவருக்கு ஆடம்பர மாளிகை ஒதுக்கப்பட்டிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் புகெட் நகரை விட்டு பாங்கொக் நகரில் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
