கோட்டாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
தனிப்பட்ட விஜயத்தை தவிர்த்து அவர் வேறு எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை மற்றும் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளின் பின்னர் வெளியிடப்பட்ட MFA அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.
“கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி என்ற பதம் நீக்கப்பட்ட அறிக்கையை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri