கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்! அரசியல் வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அவருடனான உரையாடல்களில் அரசியல் இல்லாமல் பொதுவான தகவல்கள் மட்டுமே இடம்பெறுவதாகவும், இவர் அரசியலுக்கு வருவது குறித்து சில வருத்தங்கள் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ முகபுத்தகத்தை பயன்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
