கோட்டாபய இருக்கும் இடம் தெரியாமல் தடுமாறும் சபாநாயகர்
புதிய இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் தான் இருக்கின்றார் என்று சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பிபிசிக்கு வழங்கிய நேர்காணலி்ல் இதற்கு முன்னர் சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் இப்போது மற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிபிசியுடனான நேர்காணலில் தான் சிறிய தவறு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாதுகாப்பு படைகளின் தலைவர் உட்பட அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டபாய
எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை உறுதிப்படுத்திய சபாநாயகர், எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதி கோட்டாபய மீண்டும் நாடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் வெற்றி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அது உச்சம் கண்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் திகதி கோட்டபாயவின் பயணம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவின் டுபாய்கான பயண பாதை தொடர்பில் இராணுவ ஆய்வாளர் அருஸ் எமக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.