யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“பதுளையில் டிலான் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்தார். யோஷிதவையும் பதுளையில் களமிறக்க திட்டமிட்டார்கள்.
அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவும் குழப்பத்தில் இருந்தார். யோஷவை களமிறக்கவுள்ளோம் என டலஸ் கோட்டாபயவிடம் கூறிய போது அந்த முட்டாள் வேலையை செய்துவிடாதீர்கள் என கோட்டாபய கூறியிருந்தார்.
அப்படி செய்தால் ஆடை அணிந்து வீதியில் செல்ல முடியாமல் போய்விடும் என கோட்டாபய குறிப்பிட்டார்.
எப்படியோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கோட்டாபய அதனை தடுத்து நிறுத்தி விட்டார்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam