கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்ட முதல் குடில்! நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலை ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே அமைக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியன் உறுப்பினர் ஆஷு மாரசிங்கவினால் இந்த குடில் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்களை தாக்க ஆரம்பித்த ரணில்
மேலும், காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றும் நாடாளுமன்றத்தில் விமல் சுட்டிக்காட்டினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
