அமைச்சரவை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாயவின் நிலைப்பாடு
அமைச்சரவை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் அவதானம் செலுத்தவில்லை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அமைச்சரவை திருத்தம் ஒன்று இடம்பெறுவதாக வெளியாகும் தகவல் தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அமைச்சரவை திருத்தம் மேற்கொள்வதென்றால் இதுவரையில் அதற்கான ஆயத்தங்கள் காணப்பட வேண்டும். எனினும் இதுவரையில் அவ்வாறான ஆயத்தங்கள் இல்லை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை திருத்தம் ஒன்று இடம்பெறும் என்றால் அது மிக சிறிய திருத்தமாக இருக்கும் எனவும் தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவி பெற்றுள்ளவர்களின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாதென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri