கனடாவில் உணவுப்பொருட்கள் வாங்க அவதிப்படுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
கனடாவில்(Canada) தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க பிரபல நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என கூறப்படுகிறது.
கனடாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான Loblaw, கனடாவின் பல பகுதிகளில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது.
1,300 வகையான பொருட்கள்
இந்நிலையில் No Name stores என அழைக்கப்படும் இந்த கடைகளில் முதல் மூன்று கடைகள், அடுத்த மாதம் Windsor, St. Catharines மற்றும் Brockville ஆகிய இடங்களில் திறக்கப்பட உள்ளன.
மேலும், குறித்த மளிகைக்கடைகளில், 1,300 வகையான பொருட்கள் கிடைக்கும் எனவும் இந்தக் கடைகள், காலை 10.00 மணி முதல், மாலை 7.00 மணி வரைதான் இயங்கும் எனவவும் கூறப்படுகிறது.
அத்துடன், மற்ற கடைகளில் கிடைக்கும் பொருட்களைவிட, இங்கு கிடைக்கும் பொருட்கள், 20 சதவிகிதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.