கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
கனடாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வீடுகளின் விலையில் பாரிய சரிவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனேடிய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.
இதன் காரணமாக, கனடாவில் வீடுகளின் விலை அடுத்த ஆண்டு இறுதிக்குள், 15 சதவீதம் குறையும் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
கனேடிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் உயர்வு
பெப்ரவரி 2022 ல் கனடாவில் ஒரு வீட்டின் சராசரி விலை $790,000 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இதற்கமைய, டிசம்பர் 2023க்குள் சராசரி தேசிய வீட்டு விலை சுமார் $675,000 ஆகக் குறையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, கனேடிய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதிலிருந்து கனடாவில் வீட்டின் சராசரி விலை மார்ச் மாதத்தில் 2.6 சதவீதமும், ஏப்ரலில் 3.8 சதவீதமும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri