கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவில் இந்த வாரம் மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் 3 cents வரையில் லிற்றர் ஒன்றுக்கு அதிகரிக்கலாம் எனவும்,திங்கட்கிழமையின் பின்னர் நாடு முழுவதும் சராசரி எரிபொருள் விலை லிற்றருக்கு $2.12 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய சராசரி எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை சுமார் $2.06 என அதிகரித்து, முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று சென்ட்கள் உயர்ந்ததுடன் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 11 சென்ட்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எரிபொருள் விலை
இதனிடையே, வான்கூவரில் வார இறுதியில் ஒரு லிற்றருக்கு கிட்டத்தட்ட $2.37 விலையும்,மாண்ட்ரீல் பகுதியில் லிற்றருக்கு $2.24 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், செயின்ட் ஜான்ஸில் லிற்றருக்கு $2.23 என விற்கப்பட்ட நிலையில், ரொறன்ரோவில் ஒரு லிற்றர் வழக்கமான அன்லெடட் பெட்ரோலுக்கு $2.15 வசூலிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam