அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பரப்பப்படும் செய்தி
யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார்.

அமைச்சரின் பதில்
இதற்கு பதிலளிக்கும் போது அவர், குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், அமைச்சரவையில் பெட்ரோல் விலையேற்றம் தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நேற்று யாழ். மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam