கடலிற்கு சென்ற இளைஞர்களுக்கு அடித்த அதிஷ்டம்!(Photo)
சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளது.
அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இன்று(03) இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மீனின் பெறுமதி

சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இந்த மீன் தூண்டிலில் சிக்குண்டு கடலில் அட்டகாசம் காட்டியதுடன் இளைஞர்கள் அந்த மீனை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொண்டிருந்துள்ளனர்.


அத்துடன் அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்காக சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri