கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் தங்க வீதி
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் அதிக வருமானம் பெறும் பயணிகளுக்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதிக வருமானம் பெறும் அல்லது வசதியானவர்களுக்காக தங்க மாவத்தை (Gold route) என்ற புதிய சேவை முனையம் திறக்கப்பட்டது.
அதிக வருமானம் பெறும் பயணிகள் இந்த ஓய்வறைக்கு சென்று விமான நிலைய கடமைகளை செய்ய வரிசையில் நிற்காமல் தங்கள் குடியேற்றம், சுங்கம், உணவு மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை மிக விரைவாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த புதிய முனையத்திற்கு, ஒரு பயணியிடம் இருந்து 200 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும், அந்த தொகையை செலுத்தி இந்த வசதிகளை ஒன்லைனில் பதிவு செய்யலாம்.
அதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தை மறுசீரமைத்து அதன் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மாற்றும் நோக்கத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
