மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ள தங்கத்தின் விலை
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 208,000 ரூபாவாக உள்ளது.
அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 191,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை
நேற்றைய தினதம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 209,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 192,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,650.84 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam