பல மாதங்களுக்கு பின் கொழும்பில் இன்று பாரிய வீழ்ச்சியுடன் பதிவான ஆபரண தங்கத்தின் விலை
கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரம்
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் (01.11.2022) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாக உள்ளது.
அதேவேளை 22 கரட் (ஆபரண தங்கம்) 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 157,250 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நேற்றைய தினம் (31.10.2022) 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,700 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 170,000 ரூபாவாகவும் கொழும்பு செட்டியார்தெருவில் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 175,000 ரூபாவாகவும் செட்டியார்தெரு பகுதியில் பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியின் பின் மிகக் குறைந்த தங்க விலை
பொருளாதார நெருக்கடியுடனான கடந்த பல மாதங்களுக்கு பிறகு இலங்கையின் வரலாற்றில் மிகக் குறைந்த தங்க விலை இன்று பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலை குறைவடைய காரணம் எனவும், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சடுதியாக மேலும் குறைவடைய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
