ஒரே நாளில் இரு தடவைகள் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இன்று தங்க விலையில் இரு தடவைகள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்க விலை நிலவரம்
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 33,250 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலை 30,563 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
விற்பனை
மேலும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் ( 22 karat gold 8 grams) விலை 24,938 ரூபாவாகவும் 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(02.06.2025) தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருந்தது.
மேலும், கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam