வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இன்று நாடு திரும்பிய நிலையில் 27 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வு பிரிவு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri