போராட்டத்தை நடத்திவிட்டு சிக்கிய வீரவன்ச- பின்னணியில் அம்பலமான சதிதிட்டங்கள்
அரசியல் வரலாற்றை பாரத்தால் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனை தவிர வேறு எந்த அரசியல்வாதியோ உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தாக வரலாறு இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த முறை உண்ணாவிரம் என்று இருந்தால் என்ன நடக்கும் என்று விமல்வீரவன்சவிற்கு தெரியும்.
அதனாலேயே அவர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தார். விமல் வீரவன்சவினால் இந்த போராட்டத்தினால் எந்த தாக்கமும் இல்லை.
இந்த புத்தகவிவகாரத்தில் தான் கைது செய்யபோகின்றேன் என்ற பயத்தில் அதனை திசை திருப்புவதற்காக இவ்வாறு செயற்படுகின்றார் என குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..