5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடம் பிடித்த விராட் கோலி
ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை ஐசிசி பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
புதிய தரவரிசை
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ஓட்டங்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 785 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கோலி முதலிடம்
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்து ரோகித் சர்மா 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசில்ந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார்.

இப்ராஹிம் சத்ரன் 4-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இது கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 11-வது முறையாக ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri