நாளை ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்
நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி, பங்கேற்கவுள்ளார்.
வடக்கிற்கு விஜயம்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் உட்பட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இன்னும் வீடுகளின்றி உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.
மேலும், போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் 16 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam