ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகள் நியமனம்! விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 23,344 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உடனடியாக இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக ஆசிரியர் சேவைக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய இரண்டு தனித்தனியான போட்டிப் பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் நியமனம்
அதன்படி, முதலாவது பரீட்சை தற்போது அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காக மட்டுமே நடத்தப்படும்.

இரண்டாவது பரீட்சை நாட்டிலுள்ள ஏனைய அனைத்து பட்டதாரிகளுக்கும் பொதுவானதாக அமையும்.
இந்த இரண்டு பரீட்சைகளிலும் பெறப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில், அதிக புள்ளிகளைப் பெற்ற தகுதியானவர்கள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.