திருகோணமலை கன்னியா பகுதியில் மர்மமாக முளைத்த புத்தர்
திருகோணமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளும், தமிழர் விரொத செயல்களும் ஆட்சி மாறினாலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில் தற்போது கன்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் இராவணனுக்குமிடையிலான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் அங்கு புதிதாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது, அது எப்போது வந்தது என்று தெரியாது.
இலங்கையில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் துன்பத்தில் இருக்கும் சூழ்நிலையில் அங்கு பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் கன்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் அருகிலுள்ள விகாரைக்கும் தொடர்பு உள்ளதா? மற்றும் இது தொடர்பிலான வரலாறு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெளிவுப்படுத்தியுள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..