கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு - கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (07.10.2026) வழக்கு விசாரணைக்கு வந்த எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது ஞானசார தேர் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தண்டணைக்கு எதிராக தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்றும், அதன் தீர்ப்பு வரும் வரை இந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் தேரரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேரர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்றைய தினம் (07.10.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
காவி உடை களையப்பட்ட விவகாரம்
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே ஞானசார தேரர் நடத்தப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் விவகாரத்தில் விசேட ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறைச்சாலைகளில் சுமார் 63 பௌத்த தேரர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என குறிப்பிட்ட அவர், அவர்களும் இதே விதமாகவே நடத்தப்படுகின்றனர் என சுட்டிக்காட்டி உள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri