யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்

Jaffna Trincomalee University of Jaffna
By Theepan Oct 07, 2026 10:58 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெற்று வரும் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்று (07.10.2026) இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

 பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்று, சமூகத்தின் குரலாக ஒலித்த இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன். கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி அதிகாலை வேளையில், நடைமுறையிலிருந்த கடுமையான இராணுவ ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில், அவரது வீட்டில் வைத்து பெற்றோரின் கண்முன்னாலேயே ஆயுததாரிகளால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் | 41St General Convocation Of The University Jaffna

அன்னாரின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு, யாழ். இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களான அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.

இந்நிதியத்தின் ஊடாக, யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இத்தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்காவின் ஊடகப் பயணம்

திருகோணமலை, புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவியான தனுஷ்கா சஞ்ஜீவ, 2019 உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 10ஆம் இடத்தைப் பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் | 41St General Convocation Of The University Jaffna

ஊடகத்துறை மீதான தீராத தாகத்தால் அதனைச் சிறப்புக் கலையாகக் கற்ற அவர், தற்போதைய 43ஆம் அணியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தனது கற்கை நெறியின் போது, திருகோணமலை விவசாயக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் யானை-மனித மோதல் தொடர்பான ஆழமான ஆவணப்படத்தைத் தயாரித்தமை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளில் திறம்படப் பணியாற்றியமை போன்ற பல செயன்முறை அனுபவங்களை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

இவரின் சிறப்பான கல்வித் திறனால், தற்போது ஊடகக் கற்கைகள் துறையிலேயே தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

தனுஷ்காவின் நெகிழ்ச்சியான பதிவு

தமக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பகிர்ந்துகொண்ட மாணவி தனுஷ்கா சஞ்ஜீவ, தனது உணர்வுகளைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

"சமூகத்தின் கண்ணாடியாகவும் மக்களின் குரலாகவும் திகழும் ஊடகங்களின் இயல்பையும், அதன் தாக்கத்தையும் எனக்கு ஆழமாகக் கற்றுத்தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கு முதற்கண் எனது நன்றிகள். விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களும், ஊடகத் துறைசார் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகளுமே எனது அறிவுப்புலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின.

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் | 41St General Convocation Of The University Jaffna

"எனது கல்விக்கும், இலட்சியப் பயணத்திற்கும் எப்போதும் உற்ற துணையாக நிற்கும் எனது பெற்றோர் மற்றும் கணவருக்கும், என்னை முன்னகர்த்திய ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சனின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கத்திற்கான நிதியத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, ஊடகத்துறையில் சாதிக்கும் மாணவர்களைக் கௌரவிப்பதற்குரிய உயர்ந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ‘நிலா நிதியம்’ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்

யாழ். பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US