இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு
2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதுடன், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உடன் இணைந்து இன்று (21) ஏற்பாடு செய்திருந்த இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாட்டு - 2023 இல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை
பசுமை ஹைட்ரஜன் மாநாடு
இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்ரஜன் வழிகாட்டல் வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் 2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியமென இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாடு - 2023 இல் ஜனாதிபதி ரணில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.