மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்
கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டுள்ள சிறுமி
ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த இளைஞர், சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த உறவினரின் வீட்டுக்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.