சுவிஸ் பொலிஸ் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண்
சுவிஸ் பொலிஸ் நிலையம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவரே சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள Boulevard Carl-Vogt என்னுமிடத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதித்துறை விசாரணை
இதன் போது அவர் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டதாக கூறியுள்ள பொலிஸார், அவசர உதவியை அழைத்த நிலையில் அவர்களால் குறித்த பெண்ணை காப்பாற்றமுடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில், இதே பொலிஸ் நிலையத்தில் இப்படி காவலில் வைக்கப்பட்டவர் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
