போருக்கு பின்னரான இஸ்ரேலின் திட்டத்தை வெளியிட்ட நெதன்யாகு
ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பின்னரான திட்ட விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
குறித்த அறிக்கையில் போருக்கு பின்னர் காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேல் பங்கு தொடர்பான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
அதன்படி போர் நிறைவுற்று, இராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், காசா முழுக்க இஸ்ரேல் இராணுவம் சுதந்திரமாக செயல்படும்.
காசாவிற்குள் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவப்படும். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடம் நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |