வெளிநாட்டில் இலங்கையருக்கு நேர்ந்த விபரீதம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்கனையை சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை மீதே இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத்தில் சுமார் 8 வருடங்களாக பணிபுரிந்து வரும் பாதிக்கப்பட்ட நபர் உணவு ஓர்டர்களை எடுத்துச்செல்லும் சாரதியாக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற ஓர்டரை எடுத்துச் செல்லும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்து செல்லுமாறு கோரிக்கை
உணவு ஓர்டரை தாமதமாக எடுத்து வந்ததாக கூறி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 30 தையல்கள் போடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனக்கு நீதியை பெற்றுக்கொடுத்து, மீண்டும் நாட்டுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
