மியன்மாரில் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு
மியன்மாரின் இணைய குற்றச்செயல்கள் இடம்பெறும் முகாமுக்கு மற்றுமொரு இலங்கையர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணினித் துறையில் வேலைவாய்ப்பு தேடிச் சென்ற 56 இலங்கையர்கள் பலவந்தமாக குறித்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மற்றுமொரு இலங்கையர் இணைய குற்றச்செயல்கள் இடம்பெறும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த இலங்கையர் மியன்மாரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இடைத்தரகர் ஊடாக வேலைவாய்ப்ப
இந்த நிலையில் டுபாயில் உள்ள ஒரு இடைத்தரகர் ஊடாக குறித்த இலங்கையர் அங்கு வேலைவாய்ப்பை தேடி சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர் வெளியிட்ட தகவலுக்கு அமைய, மேலும் 15 பேர் கொண்ட மற்றுமொரு குழு குறித்த முகாமுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மியன்மாரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இணைய குற்றச்செயல்கள் இடம்பெறும் முகாமுக்கு மேலும் இரண்டு இலங்கையர்கள் வருகை தரவுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க முடியாத பின்னணியில் வேறு ஒரு குழு முகாமுக்கு வந்தால் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினம் என்றும் தூதுவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |