கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் செய்ய தவறிவிட்ட கானா
தமது கடன்களை மறுசீரமைக்க இலங்கை, சர்வதேச பத்திரகாரர்களுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், 13 பில்லியன் டொலர் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க இரண்டு பத்திரதாரர் குழுக்களுடன் ஒப்பந்தம் செய்ய கானா (ghana) தவறிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயல்புநிலை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக வெளிவருவதற்கான அதன் முயற்சிகளுக்கு, இது மீண்டும், பாதிப்பாக அமையும் என்று, கானா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தை
தமது கடன் நிலைத்தன்மை அளவுருக்களுக்கு பொருந்தாது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 16 முதல் கானா தனது சர்வதேச பத்திரங்களை வைத்திருக்கும் இரண்டு குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
2022, டிசம்பரில் கானா பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதன் வெளிநாட்டுக் கடனின் பெரும்பகுதியான சுமார் 30 பில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |