அநுரவிடம் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ள ஜெர்மனி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிய விஜயத்தின் போது, இலங்கையின் மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனிய அரசாங்கம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ள நிலையில், இந்த கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கும் என்று ராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.
மனித உரிமை மீறல்கள்
2025 ஜூன் 12 ஆம் திகதி முதல், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனிக்கு செல்லவுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மனிய ஜனாதிபதி வோல்டர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பேச்சுவார்த்தை
அத்துடன், பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, முதலீடு, சுற்றுலா மற்றும் பிற வணிக வாய்ப்புகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
