அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை இன்னும் இல்லை
அநுர அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள, 323 சிவப்புக் கொடி கொண்ட கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான விசாரணைகள், இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு, இந்த விசாரணைகளை ஆரம்பித்து, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னரும், இன்னும் அது நிறைவுப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
கடந்த ஜனவரி மாதத்தில், சுங்க ஆய்வுகள் இல்லாமல் கொழும்பு துறைமுகத்திலிருந்து, குறித்த 323 சிவப்புக் கொடி கொண்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், குறித்த விசாரணைக்குழு, தமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் என்று, துறைமுக பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த கொள்கலன் விடுவிப்பின் பின்னணியில் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இருப்பதாக எதிர்க்கட்சியின் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனினும், எதிர்க்கட்சிக்கு பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்று அமைச்சர் கொடித்துவக்கு கூறியுள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan