சஜித் அணி சிறுபிள்ளைத்தன விளையாட்டு! அமைச்சர் பிமல் பகிரங்கம்
கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றினால் நாட்டின் முழு அதிகாரமும் தங்கள் வசம் வரும் என்ற எண்ணத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் ஆட்சி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில், "கொழும்பு மாநகர சபையில் அதிக ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பல சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
மேயர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் வெற்றிவாகை சூடுவார். சஜித் அணியினர் எந்த வழியிலும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan