இலங்கை மக்களுக்கு அநுர கொடுக்கப் போகும் 10 ஆயிரம் ரூபா..! வெளியான உண்மை நிலவரம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளது.
பத்தாயிரம் ரூபா பணம்..
உலக வங்கியுடன் இணைந்து பத்தாயிரம் ரூபா பணத்தை ஜனாதிபதி வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களை பிழையாக வழிநடத்தவும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவும் இவ்வாறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு தொடர்பிலான மேலதிக விபரங்கள் உள்ளடங்கிய இணைய இணைப்பு பற்றிய விபரங்களும் பதிவிடப்பட்டிருந்தது, எனினும் இந்த லிங்குகளில் இந்த கொடுப்பனவு தொகை பற்றிய விபரங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
